Thursday, May 16, 2013

பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!

50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்...
பட்டதாரி இளைஞர்களின்
பலே விவசாயம்..!

விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!
சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். ‘நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்...
-பசுமை விகடன், 25.01.2013

பொன் முட்டையிடும் வாத்து வளர்ப்பு!

1000 வாத்துகள்...
1,25,000 முட்டைகள்...
2,00,000 ரூபாய் லாபம்!
பொன் முட்டையிடும் வாத்து வளர்ப்பு!

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.....
கையில் நீளமான கம்புடன் ஹோய்..., ஏய்..., என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்க....
அந்த சத்தத்துக்கு எசப் பாட்டு படிப்பது போல ‘பக், பக்‘ என சத்தம் கொடுத்துக் கொண்டே ஒதுங்குகின்றன, பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.... தஞ்சைப் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் இது போன்ற காட்சிகள் தாராளமாகக் காணக் கிடைக்கும்.
வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லையென்றாலும், வாத்தின் முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால், முட்டைக்காக பட்டி போட்டு வாத்து வளர்க்கும் பழக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒரத்தநாடு அருகே உள்ள நத்தம் கிராமத்தில், பட்டி போட்டு வாத்து வளர்த்து வருகிறார், நடராஜன்.
பசுமை விகடன், 10-அக்டோபர் 2009.

2,000 சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கு... 80% சதவீத மானியம்...!

2,000 சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கு...
80% சதவீத மானியம்...!

‘‘தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு, 80 சதவீத மானியத்துடன், சூரிய சக்தியுடன் இயங்கும் 2,000 பம்பு செட்டுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது‘‘ என்று, சட்டசபையில் முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.